ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை


ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 13 Feb 2024 2:13 AM GMT (Updated: 13 Feb 2024 8:31 AM GMT)

அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது .

சென்னை,

வரும் 26 -ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் , ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இன்று பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஷ் ஆகியோர் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.


Next Story