கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு முடிவு - வைகோ வரவேற்பு


கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு முடிவு - வைகோ வரவேற்பு
x

சீமைக் கருவேல மரங்களை அகற்ற கொள்கை முடிவை மேற்கொண்டு அதற்கான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சீமைக் கருவேல மரங்கள் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சுவதுடன், உயிர்க் காற்றையும் உறிஞ்சிக் கொண்டு கரிக்காற்றை வெளியிடுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் கெடுகிறது. சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், சீமைக் கருவேலம் உள்ளிட்ட அன்னிய மரங்களை அகற்றி சுற்றுச்சூழலை மீட்டெடுப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை பிறப்பித்துள்ளது என்று கூறி ஜூலை 13-ந் தேதியிட்ட அரசாணை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை முற்றாக அகற்ற கொள்கை முடிவை மேற்கொண்டு அதற்கான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறேன்.

தமிழகத்தைப் பற்றி படர்ந்து நாசமாக்கி வரும் சீமைக் கருவேல மரங்கள் முழுதாக ஒழிக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதற்கு ம.தி.மு.க. மேற்கொண்ட சட்டப் போராட்டங்கள் வெற்றி அடைந்து இருக்கின்றது. தமிழ்நாட்டின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் ம.தி.மு.க. என்றும் பாடுபடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story