செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவின் போது பிரதமருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை - அண்ணாமலை


செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவின் போது பிரதமருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை - அண்ணாமலை
x

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவின் போது பிரதமருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உடன் இன்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் துணை ராணுவப் படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திருக்கு பாதுகாப்பு கோரியும், தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியானது.

இந்த சந்திப்பையடுத்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்திதார். அப்போது அவர் கூறியதாவது,

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவின் போது சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றார். மேலும், பிரதமர் வருகையின் போது, மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளில் குறைபாடு இருந்துள்ளது. பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய பாதுகாப்பு படையினர் மாநில அரசிடம் தகவல் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மத்திய அரசின் கனவு திட்டமான வீடுகளுக்கு குடீநீர் வழங்க்கும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளது. வீடுகளுக்கு குடீநீர் வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டை பகுப்பாய்வு செய்ய கவர்னரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக கவர்னரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்திற்கு அரசாணை கூட பிறப்பிக்கப்படவில்லை. சட்டம் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்வது கவர்னரின் கடமை. கவர்னர் வேலை செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது என்றார்.




Next Story