இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை... - ராமதாஸ் டுவிட்


இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை... - ராமதாஸ் டுவிட்
x

இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சட்டசபை கூட்டத்தொடரின் கவர்னர் உரையின்போது அரசு சார்பில் வழங்கப்பட்ட அறிக்கையில் தமிழ்நாடு, சமத்துவம், பெரியார் போன்ற வார்த்தைகளை விடுத்து கவர்னர் உரையாற்றியது பேச்சுபொருளானது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் பல கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவுக்கான அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினை இடம்பெறவில்லை. மாறாக மத்திய அரசின் இலச்சினை இருந்தது. இதற்கும் திமுக கூட்டணி கட்சி சார்பில் கண்டனம் எழுந்தது. ஆனால், கடந்த ஆண்டு கவர்னர் மாளிகை பொங்கல் திருவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினை இடம்பெற்றிருந்தது. இதனால், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முரணாக கவர்னரின் செயல்பாடுகள் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "

இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை...

ஆளுனர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில்

திருவள்ளுவர் ஆண்டு இல்லை...

தமிழ் மாதம் இல்லை...

தமிழ்நாடு இல்லை....

தமிழ்நாட்டரசின் இலச்சினை இல்லை.

இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை!" என்று அதில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.




Next Story