இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்


இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2023 12:15 AM IST (Updated: 14 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கன்னியாகுமரி

பாலஸ்தீனம் மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேலை கண்டித்து நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சையது அலி கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை நிகழ்த்தி வருகிறது. அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். மக்கள் வாழும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் வான்வழி தாக்குதல் மூலம் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஹுசைன் ஜவாஹிரி, பொருளாளர் சையது அகமது கரீம் மற்றும் நிர்வாகிகள் முகமது யாசிர் நூருல் அமீன் சியாசுதீன், முகமது ராபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story