தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை 2 -3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்: வானிலை மையம்


தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை 2 -3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்: வானிலை மையம்
x
தினத்தந்தி 17 April 2023 2:21 PM IST (Updated: 17 April 2023 3:27 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற தயங்குகின்றனர். மேலும், வெப்பத்தை தனிக்க மக்கள் இளநீர், தர்பூசனி மற்றும் குளிர்பான கடைகளை நாடிச்செல்வதை கான முடிகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை 2 -3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்: வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் ஏப்.19 வரை 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் கூறியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்.20,21-ம் தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.


Next Story