தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் இயல்பை விட அதிகரிக்கும்.! வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனிடையே, தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வெயிலும் சுட்டெரித்து வருகிறது. சில பகுதிகளில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியும் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story