தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்

தமிழக சட்டசபைக்குள் நுழைந்த அமலாக்கத்துறை அத்துமீறலையும், மத்திய பா.ஜ.க. அரசையும் கண்டித்து நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். மத்திய மண்டல துணைச் செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இதில் தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முடிவில் கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.


Next Story