தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரத போராட்டம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரத போராட்டம்
x

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜபஸ்டியான், மாநில துணை செயலாளர் குருசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜோசப் விளக்க உரையாற்றினார். இந்த போராட்டத்தில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான ஆசிரிய ஆசிரியைகள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.


Next Story