சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் தமிழக சிலைகள் - உரிய தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவிப்பு


சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் தமிழக சிலைகள் - உரிய தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவிப்பு
x

சிலைகள் குறித்து உரிய தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் உள்ள 'ஏஷியன் சிவிலைசேஷன்' அருங்காட்சியகத்தின் இணையதளத்தில் மிகவும் தொன்மையான சிலைகள் மற்றும் கலைப் பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து வாங்கி வரப்பட்டதாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் தமிழ்நாட்டில் உள்ள எந்த கோவிலுக்குச் சொந்தமானது என்று புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள தமிழக சிலைகள் குறித்து உரிய தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.


1 More update

Next Story