"3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் செஸ் விளையாடியுள்ளனர்" - அமைச்சர் பெரியகருப்பன்


3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் செஸ் விளையாடியுள்ளனர் - அமைச்சர் பெரியகருப்பன்
x

கீழடி அகழ்வாராய்ச்சியில் சதுரங்க ஆட்டக்காய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்கின்றனர். ஓபன் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் இடம்பெறுகின்றன.

மேலும் இந்தியா சார்பில் விஸ்வநாதன் ஆனந்த், போரிஸ் ஜெல்பாண்ட், ஆர்.பி.ரமேஷ், அபிஜித் குந்தே ஆகியோர் பயிற்சியில்3 அணிகள் களம் இறங்குகின்றன. இதில் 25 வீரர்-வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இதனிடையே சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழர்களுக்கு செஸ் விளையாட்டு ஒன்றும் புதிதானது அல்ல என்றும், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் செஸ் விளையாடியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

கீழடி அகழ்வாராய்ச்சியில் சதுரங்க ஆட்டக்காய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், செஸ் விளையாட்டின் தாயகமே தமிழகம் தான் என்று கூறினார்.


Next Story