"தீபாவளிக்கு ரூ.250 கோடிக்கு ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு" - அமைச்சர் நாசர் தகவல்


தீபாவளிக்கு ரூ.250 கோடிக்கு ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு - அமைச்சர் நாசர் தகவல்
x

ஏழை மக்கள் பயன்படுத்தும் வகையில் சேவை நோக்குடன் சிறப்பு இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

சென்னை,

தீபாவளியை முன்னிட்டு ஆவினில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 9 வகையான சிறப்பு இனிப்பு வகைகளை சென்னையில் அமைச்சர் நாசர் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த இனிப்பு வகைகள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக கூறினார்.

ஏழை மக்கள் பயன்படுத்தும் வகையில் சேவை நோக்குடன் சிறப்பு இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்ட அவர், தீபாவளிக்கு ரூ.250 கோடிக்கு ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆவின் பால் விலையை குறைத்ததால் ஆண்டுக்கு ரூ.225 கோடியும், ஒரு நாளைக்கு 85 லட்சம் ரூபாயும் இழப்பு ஏற்படுவதாக அமைச்சர் நாசர் கூறினார். தனியார் நிறுவனங்களை விட ஆவின் பொருட்களின் விலை குறைவாக தான் உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அது குறித்து விரைவில் முதல்-அமைச்சர் முடிவெடுப்பார் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.


Next Story