டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

மதுபான உற்பத்தி ஆலை நிர்வாகங்கள் இறக்குமதி கூலி உயர்வை உடனே வழங்க வேண்டும். இதற்கு டாஸ்மாக் நிர்வாகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும். டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்கவும், ஏற்றுக்கூலி தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி நிர்ணயம் செய்யவும் வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர்கள் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.), டாஸ்மாக் சுமைப்பணி ஒருங்கிணைப்பு குழு சார்பில் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். செயலாளர் திருமலைராஜாராம் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர் சர்புதீன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கிளை துணை செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.


Next Story