ஆலங்காயத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
ஆலங்காயத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர்
வாணியம்பாடி
ஆலங்காயத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் ஆசிரியர்கள் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதன்படி நேற்று காலை காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கம் தலைமை தாங்கினார்.
தேர்தல் வாக்குறுதியின் போது தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதாகவும், பல்வேறு ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கு தேவையான பணிகொடைகளை வழங்கப்படுவதாக அறிவித்து இருந்தது, ஆனால் அதனை செயல்படுத்தாததை கண்டித்து ஒரு நாள் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
Related Tags :
Next Story