வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை


வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை
x

கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே பெருங்களூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன் மகள் அபிநயா(வயது 19). இவருக்கும் ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சன் மகன் அஜய்(24) என்பவருக்கும் கடந்த 8-12-2021 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது நகை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை பெண் வீட்டார் கொடுத்தனர்.

இந்த நிலையில் திருமணம் ஆன நாள் முதல் அஜய் அவரது மனைவியிடம் மேலும் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் நகைகளை தாய் வீட்டில் இருந்து வாங்கி வரும்படி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அபிநயா கொடுத்த புகாரின் பேரில் அஜய், இவருடைய தந்தை மஞ்சன், தாய் மலர் ஆகிய 3 பேர் மீதும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story