இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 6 Oct 2023 12:30 AM IST (Updated: 6 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே பிரானூர் பார்டர் பஞ்சாயத்து ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணி என்ற அம்மு (வயது 21). இவருக்கும், ஆலங்குளம் அருகே உள்ள வீராணம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து கலைவாணி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனவேதனையில் காணப்பட்ட கலைவாணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கலைவாணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story