தம்பதியை தாக்கிய வாலிபர் கைது
தம்பதியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 49). இவர் தனது மனைவியுடன் கோரையாற்றின் கரையில் நடந்து சென்றார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த சமத்துவநகரை சேர்ந்த வீரகுமார் (26) பழனிவேலுடன் தகராறு செய்து, கல்லால் தாக்கி, அவருடைய மனைவியை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிச்சை எடுத்த பெண்கள் மீது வழக்கு
*திருச்சி மாநகரில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த பெண்களை பிடித்த போலீசார், குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்தநிலையில் குழந்தைகளை பிச்சை எடுக்க பயன்படுத்திய 6 பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் நேற்று முன்தினம் கோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற மதுரை பெண் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுவன் உள்பட 3 பேர் கைது
*திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (32) தனது மோட்டார் சைக்கிளை கண்டோன்மெண்ட் பகுதியில் நிறுத்தி இருந்தார். அதை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இதுபோல் காந்திமார்க்கெட் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த கருப்பசாமி (34), முகமது சித்திக் (50) ஆகியோரின் மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மோட்டார் சைக்கிளை திருடியது புதுக்கோட்டையை சேர்ந்த ராஜேஷ்வின்டி (23), பாலக்கரையை சேர்ந்த அருண்குமார் (19) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
வாகனம் திருட்டு
*முசிறி சாலியர் தெருவை சேர்ந்த முருகானந்தம்(41), ஒரு ஓட்டல் முன்பு நிறுத்தியிருந்த அவரது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதையடுத்து அங்கு வெகு நேரமாக நின்ற மற்ெறாரு இருசக்கர வாகனத்தை முசிறி போலீஸ் நிலையத்திற்கு ஓட்டிச்சென்ற அவர், இது குறித்து புகார் அளித்தார்.