சென்னையில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது


சென்னையில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது
x

வாலிபரை கைதுசெய்த போலீசார், மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை,

செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர், சென்னையில் 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சேகர், ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை ஒடிசா மாநிலத்துக்கு கடத்தி சென்றதாக தெரிகிறது. இதுபற்றி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

பின்னர் தனிப்படை போலீசார் ஒடிசா சென்று மாணவி மற்றும் சேகரை சென்னை அழைத்து வந்தனர். சேகரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


Next Story