கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் ஆதி கேசவன்(வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தார். இது பற்றிய தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கே கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த ஆதிகேசவனை கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இவருடன் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த உதயசூரியன் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசாா் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story