கஞ்சா விற்ற வாலிபர் கைது
ரோந்துப்பணியில் ஈடுபட்ட போலீசார் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த மப்பேடு இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், பேரம்பாக்கம், நரசிங்கபுரம் போன்ற பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நரசிங்கபுரம் சுடுகாட்டில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது அங்கு இருந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் தான் வைத்திருந்த ஒரு பையுடன் ஓட்டம் பிடித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விரட்டி சென்று பிடித்து விசாரித்தபோது அவர் வைத்திருந்த பையில் தடை செய்யப்பட்ட 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனை செய்த திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீபன் என்கின்ற அஜித் (வயது 24) என்பவரை கைது செய்தனர்.