கஞ்சா விற்ற வாலிபர் கைது; ஒருவர் தப்பி ஓட்டம்


கஞ்சா விற்ற வாலிபர் கைது; ஒருவர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் உள்ள பீ.தாங்கல் ஏரி கரையில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 2 மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் ஏமப்பேர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த காந்தி மகன் முரளி(வயது 20) என்பதும், தப்பி ஓடியவர் ஸ்ரீதர் மகன் மகேஸ்வரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து முரளியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மகேஸ்வரனை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story