வீட்டில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது
வீட்டில் கஞ்சா பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் அருேக உள்ள கிளியனூர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சிறப்பு தனிப்படை போலீசார், கிளியனூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கிளியனூர் கூத்தாண்டவர் கோவில் தெருவில் மூர்த்தி மகன் அய்யப்பன் (வயது 27) என்பவருடைய வீட்டில் போலீசார் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்த போது, அங்கு 918 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அய்யப்பன், கஞ்சாவை தனது வீட்டில் பதுக்கி வைத்து சிறு, சிறு பொட்டலமாக தயார் செய்து அப்பகுதி இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ரூ.32 ஆயிரம் ரொக்கம், ஒரு எடை எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.