கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை
ஆற்காடு
கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபு (வயது 28) என்பவர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
பிரபு தொடர்ந்து சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வந்தால் அவரை போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார். அதன்பேரில் பிரபு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story