பள்ளிப்பட்டு அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
பள்ளிப்பட்டு அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. 11-ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருவண்ணாமலை மாவட்டம் தனகோடி புரம் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்த் வசந்த் (வயது 22) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதை பயன்படுத்தி வசந்த் அந்த மாணவி படிக்கும் பள்ளிக்கு வந்தார். மாணவியை பள்ளிக்கு வெளியே வரச்சொல்லி அவரை கடத்தி சென்று விட்டார்.
இது குறித்து மாணவியின் தந்தை ஆர்.கே. பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Related Tags :
Next Story