காதல் மனைவி இறந்ததால் வாலிபர் தற்கொலை- வேலூர் அருகே சோகம்
காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி ஒருவர் பின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது கிராமங்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
வேலூர்,
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த திப்பசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பூவரசன் (வயது 26 )டிரைவராக பணியாற்றி வந்தார். அவரும் பள்ளிகொண்டா அருகே உள்ள கழணிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா (25) வும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர் .இதனை தொடர்ந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் பூவரசனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது .
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பூவரசனின் பெற்றோர்கள் வெளியூருக்கு சென்றிருந்தனர்.அப்போது கணவன் மனைவி இருவர் மட்டுமே வீட்டில் இருந்தனர் அப்போது ஐஸ்வர்யா தெரிந்தவர்கள் நிகழ்ச்சிக்காக வெளியே அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளார் அதற்கு பூவரசன் மறுத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார் வீட்டிற்கு சிறிது நேரம் கழித்து வந்தபோது வீட்டின் ஒரு அறை தாழிடப்பட்டதை கண்டு ஜன்னலில் பார்த்தபோது ஐஸ்வர்யா தூக்கிட்டு நிலையில் இருந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த பூவரசன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து தூக்கில் தொங்கிய ஐஸ்வர்யாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஐஸ்வர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
திருமணம் ஆகி மூன்று மாதமே ஆன நிலையில் காதல் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பூவரசனை மிகவும் பாதித்து உள்ளது. இதனால், வேதனையில் இருந்த விடியற்காலை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தனது காதல் மனைவி ஐஸ்வர்யாவின் உடல் வைக்கப்பட்டிருந்த பிணவறை அருகே சுற்றி சுற்றி வந்த பூவரசன் உறவினர்களிடம் கழிவறைக்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.
நீண்ட நேரம் திரும்பி வராததால் உறவினர்கள் சென்று பார்த்த போது பூவரசன் கழிவறை சுத்தம் செய்யும் ரசாயன கலவையை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார் உடனடியாக உறவினர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் சற்று நேரத்தில் சிகிச்சை பலனின்றி பூவரசன் பரிதாபமாக இறந்தார்.