ஏரியில் மூழ்கி வாலிபர் பலி


ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 16 March 2023 1:00 AM IST (Updated: 16 March 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:-

ஊத்தங்கரை அருகே ஏரியில் மூழ்கிய வாலிபர் உடலை 12 மணி நேரம் தேடி தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டனர்.

கூலி தொழிலாளி

ஊத்தங்கரையை அடுத்த உப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 40), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை அவரது உறவினர் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். வீட்டுக்கு அருகில் உள்ள மோர்க்குட்டை ஏரியில் குளிக்க சென்றார். அங்கு ஏரியில் மூழ்கி விஜயன் பரிதாபமாக இறந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த உறவினர்கள், ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் விஜயன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்படி இருந்தும் விஜயன் உடல் கிடைக்கவில்லை.

உடல் மீட்பு

எனவே போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினரை வரவழைத்தனர். பின்னர் இரண்டு தீயணைப்பு நிலைய வீரர்களும் விடிய விடிய தேடினர். முட்செடிகள் அதிகமாக இருந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. அப்படி இருந்தும் நேற்று காலை 9 மணி அளவில் விஜயன் உடல் மீட்கப்பட்டது.

பின்னர் விஜயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story