மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலி
x

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.

செங்கல்பட்டு

விழுப்புரம் மாவட்டம் தொரப்பி கிராமத்தைச் சேர்ந்த தயாளன் (வயது 24) என்பவர் சென்னை கிண்டியில் உள்ள கூரியர் அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஓட்டுனராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் தனது சொந்த ஊருக்கு சென்று மீண்டும் சென்னைக்கு செல்ல, மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வந்தார். அப்போது செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம்பள்ளி பஸ் நிலையம் அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தயாளன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

விழுப்புரம் மாவட்டம், நெய்குப்பி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான இளங்கோவன் கடந்த 1-ந் தேதி மதுராந்தகம் ஒன்றியம், அமைந்தகரை கிராமத்தில் வசிக்கும் மாலதி என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள பனை மரத்தில் உள்ள ஓலைகளை வெட்ட பனைமரத்தில் ஏறினார். அப்போது பனை ஓலையில் இருந்த செங்குளவிகள் இளங்கோவனை கொட்டி உள்ளது. உடனே உடனிருந்தவர்கள் இளங்கோவனை செய்யூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இளங்கோவன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


Next Story