மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
சிதம்பரத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார்.
கடலூர்
சிதம்பரம்
மேற்கு வங்காளம் மாநிலம் உத்தர் தினச்சபூர் சோல்பரா பகுதியைச் சேர்ந்தவா் சோம்கிஷ்கோ மகன் பிமல் கிஷ்கோ (வயது 20). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில், சிதம்பரம் புறவழிச்சாலையில் வடக்கு தில்லைநாயகபுரம் அருகில் நான்கு வழி சாலையில் மேம்பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று, பிமல்கிஷ்கோ, வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதையடுத்து, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story