விபத்தில் வாலிபர் சாவு


விபத்தில் வாலிபர் சாவு
x

விபத்தில் வாலிபர் இறந்தாா்.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி தாமரைகரை கீழ் காலனி பகுதியை சேர்ந்தவர் ரங்கன் (வயது 29). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை அந்தியூரில் இருந்து மைசூரு செல்லும் சாலையில் செட்டி நொடி என்ற இடத்தில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ரங்கன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ரங்கனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தின் டிரைவரை தேடி வருகிறார்.


Next Story