ரெயில் மோதி வாலிபர் பலி
கும்பகோணத்தில் ரெயில் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கும்பகோணத்தில் ரெயில் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ரெயில் மோதியது
கும்பகோணம் ஆணைக்காரன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம். இவரது மகன் மணிமுத்து (வயது 21). நேற்றுமுன்தினம் இரவு இவர் கும்பகோணம் மதுளம்பேட்டை பகுதியில் உள்ள ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது
தஞ்சாவூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற விரைவு ரெயில் மணிமுத்து மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணை
இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.