வாலிபருக்கு கத்திக்குத்து


வாலிபருக்கு கத்திக்குத்து
x

வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.

கரூர்

வேலாயுதம்பாளையம் அருகே உள்ள மலைக்காவல் அய்யன் தெருவை சேர்ந்தவர் பாலகுமாரன் (வயது 28). இவர் நேற்றுமுன்தினம் இரவு மூலிமங்கலம் பிரிவு சாலையில் உள்ள ஒரு டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள் பாலகுமாரனிடம் தகராறில் ஈடுபட்டு, தகாதவார்த்தையால் திட்டி உள்ளனர். பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து கத்தியால் குத்தி உள்ளனர்.

இதில் காயம் அடைந்த பாலகுமாரன் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பாலகுமரன் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து, தப்பியோடிய 3 மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story