தேய்பிறை அஷ்டமி வழிபாடு


தேய்பிறை அஷ்டமி வழிபாடு
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-14T00:16:14+05:30)

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதியில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் கால பைரவருக்கு மாசி மாத தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. இதில் கால பைரவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, மகாதீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் சங்கராபுரம் முதல் பாலமேடு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோவில் அர்ச்சகர் வேதகோஷங்கள் முழங்க பைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இது தவிர மஞ்சபுத்தூர் கைலாசநாதர், அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகபெருமான் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.


Next Story