தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை மையம் தகவல்


தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை மையம் தகவல்
x

அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் வரும் 19-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்றும், 20-ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story