செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டுபக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
நாமக்கல்
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே கீழ்சாத்தம்பூர் கிராமத்தில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நேற்று காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி யானை, குதிரை, ஒட்டகம், பசு ஆகியவற்றுடன் தீர்த்தகுடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு வேலூர் காவிரி சாலை, திருவள்ளுவர் சாலை, பழைய பைபாஸ் சாலை, பரமத்தி வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தகுடங்கள் மற்றும் முளைப்பாரியுடன் வந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கீழ்சாத்தம்பூர் செல்லாண்டியம்மன் கோவில் பரம்பரை தர்மகர்த்தா, கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் விலையங்குல குடிப்பாட்டு பங்காளிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story