திருச்செங்கோடு அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை


திருச்செங்கோடு அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:17:08+05:30)
நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோட்டில் உள்ள வேலூர் சாலையில் அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு 23-ம் ஆண்டு மண்டல பூஜை கணபதி பூஜை, கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து சாமிக்கு அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது. விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், செயற்குழு உறுப்பினர் நடேசன், நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் உள்ளிட்ட நகர பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தயிர் அபிஷேகம், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு இளநீர் அபிஷேகம், நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு தேன் அபிஷேகம், 27-ந் தேதி காலை 7 மணிக்கு சந்தன அபிஷேகம், 28-ந் தேதி காலை 7 மணிக்கு பன்னீர் அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற உள்ளது.

டிசம்பர் 1-ந் தேதி காலை 7 மணிக்கு நெய் அபிஷேகமும், மாலை 5.30 மணிக்கு அய்யப்பன் பள்ளி வேட்டைக்கு மகாலட்சுமி சமேத வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு எழுந்தருள்வார். 2-ந் தேதி காலை 9 மணிக்கு ஆராட்டு விழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story