மார்கழி மாத பவுர்ணமியையொட்டிநாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்


மார்கழி மாத பவுர்ணமியையொட்டிநாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் சாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இதனிடையே நேற்று மார்கழி மாத பவுர்ணமியையொட்டி ஆஞ்சநேயருக்கு எண்ணெய், பஞ்சாமிர்தம், பால், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து சாமிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story