ஓசூர் மூக்கண்டபள்ளியில்நாக முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஓசூர் மூக்கண்டபள்ளியில்நாக முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 23 April 2023 7:00 PM GMT (Updated: 23 April 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் உள்ள சிவாஜி நகரில் பழமைவாய்ந்த ஸ்ரீ நாகமுனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாைவயொட்டி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடத்தப்பட்டு நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா அலங்காரம், தீபாராதனை செய்து, சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஓசூர், மூக்கண்டப்பள்ளி, சிவாஜி நகர், தேசிங்கு நகர், எம்.ஜி.ஆர் நகர், அன்னை சத்யா நகர், ராஜாஜி நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story