அக்னி நட்சத்திரம் தொடக்கம்:தர்மபுரி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை


அக்னி நட்சத்திரம் தொடக்கம்:தர்மபுரி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 4 May 2023 7:00 PM GMT (Updated: 4 May 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்கள் ஆங்காங்கே கோடை மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் மாவட்டம் முழுவதும் வெப்ப காற்று வீசியது. மதியத்திற்கு மேல் ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதையொட்டி தர்மபுரி எஸ்.வி. ரோடு அபய ஆஞ்சநேயர் சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்கார சேவை, சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதனை தொடர்ந்து உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் வாசுதேவன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story