தர்மபுரி நெசவாளர் நகரில்ஓம் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா


தர்மபுரி நெசவாளர் நகரில்ஓம் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 4 May 2023 7:00 PM GMT (Updated: 4 May 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி நெசவாளர் நகர் ஓம் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் வேல்முருகன் கோவில் சித்ரா பவுர்ணமி விழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நடந்த மா விளக்கு ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோவில் வளாகத்தில் அம்மனுக்கு மாவிளக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று (வெள்ளிக்கிழமை) சித்ரா பவுர்ணமியையொட்டி காலை பால்குட ஊர்வலமும், இரவு வள்ளி, தெய்வானை சமேத வேல்முருகன் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகின்றனர்


Next Story