பெத்தமேலுப்பள்ளி வெங்கடேஸ்வரா சாமி கோவில் விழா


பெத்தமேலுப்பள்ளி வெங்கடேஸ்வரா சாமி கோவில் விழா
x

பெத்தமேலுப்பள்ளி வெங்கடேஸ்வரா சாமி கோவில் விழா நடந்தது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அடுத்த பெத்தமேலுப்பள்ளி கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வரா சாமி கோவிலில், 67-வது ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று காலை விநாயகருக்கு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்தன. மாலையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து கனகமுட்லு சாமி பூஜை, ஈரோஜிராவ் தர்மகர்த்தா சமாதி பூஜை, 9 மணி வரை வெங்கடேஸ்வரா சாமி கோவில், சீரடி சாய்பாபா கோவில், சுப்பிரமணியர் சாமி கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில், அபிஷேக ஆராதனை, பூஜைகள் மற்றும் மங்களார்த்தி ஆகியவைகள் நடந்தன. நேற்று காலை வெங்கடேஸ்வரா சாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகளும், வெங்கடேஸ்வரா சாமிக்கு திருக்கல்யாணமும், தொடர்ந்து கருட கம்ப பூஜைகள் நடந்தன. மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் வெங்கடேஸ்வரா சாமியின் மங்களாரத்தியும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story