கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா; பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்


கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா; பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
x
தினத்தந்தி 25 Feb 2023 2:00 AM IST (Updated: 25 Feb 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் நேற்று பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக திண்டுக்கல் பெரியகடைவீதியில் உள்ள நாடார் பேட்டையில் மதியம் 12 மணிக்கு கோட்டை மாரியம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். அப்போது கோட்டை மாரியம்மனுக்கு மாவிளக்கு, பூஜை படையல், நைவேத்தியம் ஆகியவை நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து மாலையில் முளைப்பாரி ஊர்வலம் தொடங்கியது. இளைஞர், மாதர் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கோட்டை மாரியம்மனுக்கு முளைப்பாரி எடுத்து சென்றனர். இதில் திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்கத்தின் தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சரவணன், பொருளாளர் ஸ்ரீதரன், துணை தலைவர் பூமண்டலம், உதவி செயலாளர் ரவீந்திரன், மாதர் சங்க தலைவி அல்லிராணி, செயலாளர் கற்பகம், பொருளாளர் வித்யாவதி, கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் 4 ரதவீதிகள் வழியாக வலம் வந்து கோட்டை மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கு அம்மனுக்கு முளைப்பாரி காணிக்கை செலுத்தப்பட்டது.

இதையடுத்து இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு பெரிய கடைவீதியில் உள்ள நாடார் பேட்டை கருப்பணசாமி கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் தொடங்குகிறது. இந்த ஊர்வலம் 4 ரதவீதிகள் வழியாக வலம் வந்து கோட்டை மாரியம்மன் கோவிலை சென்றடைகிறது. பின்னர் அம்மனுக்கு பால்குடம் காணிக்கை செலுத்தப்படுகிறது. மேலும் கோவில் முன்மண்டபத்தில் வண்ணக்கோலம் இடப்பட்டு, ஸ்ரீலெட்சுமி-ஹயக்ரீவர் அலங்காரமும் நடக்கிறது. அதோடு கோட்டை மாரியம்மனுக்கு சந்தனகாப்பு, பூஜை, நைவேத்தியம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்ப்படுகிறது. இரவு 9 மணிக்கு கோவில் கலையரங்கில் இசைக்கச்சேரி நடக்கிறது.


Related Tags :
Next Story