கோவில் முதல் மரியாதை தகராறு: மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீடு சூறையாடல், காருக்கு தீ வைப்பு
மதுரை அருகே கோவிலில் முதல் மரியாதை பெறுவதில் ஏற்பட்ட தகராறில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீடு சூறையாடப்பட்டது.
மதுரை,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கருவனூர் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கடந்த வாரம் நடைபெற்ற கோவில் திருவிழாவில் முதல் மரியாதை பெறுவது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம் மற்றும் தி.மு.க. கிளை செயலாளர் வேல்முருகன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம் வீட்டிற்குள் நுழைந்த வேல்முருகன் தரப்பினர், டி.வி. உள்ளிட்ட பொருட்களை நொறுக்கியதோடு, அவரது காருக்கும் தீ வைத்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து சத்திரப்பட்டி காவல்நிலைத்தில் முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் புகார் அளித்துள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ. காருக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் மதுரை மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்னம்பலம் கடந்த 2001-ம் ஆண்டு சமயநல்லூர் தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.