அழகு நாச்சியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


அழகு நாச்சியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x

திருத்துறைப்பூண்டி அழகு நாச்சியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவில் அழகு நாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமமும், பொய் சொல்லாப் பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குடம் காவடிகள் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்தலும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த திருவிளக்கு பூஜையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

1 More update

Next Story