வேங்கடாசலபதிசாமி கோவில் தேரோட்டம்
திருவிடைமருதூர் அருகே வேங்கடாசலபதிசாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
தஞ்சாவூர்
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன்கோவிலில் வேங்கடாசலபதிசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பிரமோற்சவம் கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சாந்தா, அறங்காவலர் குழு தலைவர் அக்ரோ எம். மோகன், அறங்காவலர்கள் வெங்கடேசன், ராஜேந்திரன், இளங்கோ, மகேஸ்வரி துரைராஜ் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story