அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் வலியுத்தி உள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டிற்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனத் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் தி.மு.க. அரசின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
தொகுப்பூதியம் அடிப்படையில் 400-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். தற்காலிக ஊழியர்கள் என்பதால் அவர்களுக்குப் பணிப்பயன், பணப்பயன் உள்ளிட்ட எவ்வித அடிப்படை உரிமைகளும் வழங்கப்படுவதில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஆகவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் அனைத்துவகைத் தற்காலிக பணியாளர்களையும் உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.