கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலம்: 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு


கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலம்: 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 6 Nov 2023 6:10 AM IST (Updated: 6 Nov 2023 6:42 AM IST)
t-max-icont-min-icon

தட்டாம்புதூர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே கனமழையால் தற்காலிக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த தட்டாம்புதூரில் ஓடையின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளான அரசூர், தட்டாம்புதூர், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால் தட்டாம்புதூர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், நம்பியூர், கடத்தூர் செல்லும் வாகனங்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.


Next Story