டெண்டர் முறைகேடு புகார்: எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு - தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைப்பு


டெண்டர் முறைகேடு புகார்: எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு - தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைப்பு
x

டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை,

நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கத்துக்கு எதிராக ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக அறப்போர் இயக்கத்தின் செயல் தமக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியதாக எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு தெரிவிக்கப்பட்டிருந்தது.

எடப்பாடி பழனிசாமி குறித்து தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை என்று அறப்போர் இயக்கத்தின் சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.


Next Story