தஞ்சை: விடுமுறையையொட்டி கல்லணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


தஞ்சை: விடுமுறையையொட்டி கல்லணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

கல்லணையை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர்.

தஞ்சை,

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து வரும் தண்ணீரை பகிர்ந்து அளிக்க கட்டப்பட்ட அணை கல்லணை. மாமன்னன் கரிகாலன் கட்டிய அணை சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது முதல் விடுமுறை நாட்களில் கல்லணைக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

2 கிலோமீட்டர் தூரம் நீண்ட பாலங்கள் வழியாக சென்று வெளியேறும் தண்ணீரின் அழகை ரசிக்கவும், குளித்து மகிழவும் தஞ்சை, திருச்சி மாவட்டங்களை மட்டும் அல்லாமல் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் கல்லணைக்கு வருகின்றனர். விடுமுறை நாளான இன்று காலை முதலே கல்லணையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைவாக இருந்ததால் கல்லணையை பார்க்க வந்த மக்கள் கல்லணை காவிரி ஆற்றில் இறங்கி பாலத்தின் கீழ் உள்ள நீரொழுங்கி பகுதியில் குளித்தனர். சிறுவர் பூங்காவில் ஏராளமான குழந்தைகள் பல்வேறு விளையாட்டு சாதனங்களில் ஏறி விளையாடினார்கள். கரிகாலன் மணிமண்டபம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


Next Story