தஞ்சாவூர்: மருவூர் கிராமத்தை சூழ்ந்த நீர் - 200 ஏக்கர் வாழைமரங்கள் சேதம்


தஞ்சாவூர்: மருவூர் கிராமத்தை சூழ்ந்த நீர் - 200 ஏக்கர் வாழைமரங்கள் சேதம்
x

தஞ்சாவூரில் தொடர்மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்தன.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கொள்ளிடம் ஆறு கடல் போல் காட்சியளிக்கிறது.

இந்த வெள்ளப்பெருக்கினால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளான வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு, உள்ளிக்கடை ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றின் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கினால் இந்த பகுதியில் ஏராளமான வயல்கள் இந்த தண்ணீரில் மூழ்கியுள்ளது. கரையோர கிராமங்களின் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில், கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மருவூர், வடுகவக்குடி, ஆச்சனூர் ஆகிய கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட வாழைமரங்கள் சேதம் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே நெற்பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்து இழப்பீடு வழங்குவதுபோல் வாழைகளுக்கும் இன்சூரன்ஸ் செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story