மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி - பிரேமலதா விஜயகாந்த்


மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி - பிரேமலதா விஜயகாந்த்
x
தினத்தந்தி 20 April 2024 2:46 PM IST (Updated: 20 April 2024 4:10 PM IST)
t-max-icont-min-icon

ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம்.

சென்னை,

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற மனதார எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இந்த தேர்தலுக்காக கூட்டணி சார்பாக களத்தில் இணைந்து கூட்டணி வேட்பாளர்களுக்காக அரும்பாடு பட்டு உழைத்த அனைவருக்கும் தே.மு.தி.க சார்பில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டணி தர்மத்தோடு வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு களத்தில் இறங்கி உழைத்த அனைத்து வெற்றி வீரர்களுக்கும், களப்பணி ஆற்றிய கழக வீரர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மீண்டும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம். வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கிறேன். "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்ற வகையில், மக்கள் நல்ல தீர்ப்பு அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று நம்புவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



1 More update

Next Story